Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளில் நடால் சாதனை!

In விளையாட்டு
Published: 09:56 GMT, Jul 4, 2017 |
0 Comments
1106
icon_com
This post was written by : Vithushagan
201707041205076635_Wimbledon-Rafael-Nadal-eases-into-2nd-round-with-landmark_SECVPF

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில், ரபேல் நடால் முதல் சுற்றில் பெற்ற வெற்றியால் டென்னிஸ் வரலாற்றில் 850ஆவது வெற்றியை பெற்று சாதனை படைத்துள்ளார்.

உலகின் முன்னணி வீரர்களில் ஒருவரான ரபேல் நடால் நேற்று விம்பிள்டன் முதல் சுற்றில் வெற்றி பெற்றார். டென்னிஸ் வரலாற்றில் அவர் பெற்ற 850 ஆவது வெற்றியாகும்.

உலக தரவரிசையில் 4ஆவது இடத்தில் இருப்பவரான அவர் 2001ஆம் ஆண்டு சர்வதேச போட்டியில் அறிமுகம் ஆனார். 850ஆவது வெற்றியை பெற்ற 7ஆவது வீரர் என்ற சாதனையை நடால் பெற்றார்.

ரோஜர் பெடரர், ஜிம்மி கார்னர்ஸ், இவான் லெண்டில், ஜான் மெக்கன்ரோ, ஆந்த்ரே அகாசி, குயல்லர்மோ விலாஸ் ஆகியோருடன் நடால் இணைந்தார். 180 ஆட்டங்களில் அவர் தோற்று உள்ளார்.

கிராண்ட்சிலாம் போட்டிகளில் அவர் பெற்ற 217ஆவது வெற்றியாகும். 31 வயதான அவர் 15 கிராண்ட்சிலாம் பட்டங்களை (பிரெஞ்சு ஓபன் 10, விம்பிள்டன் 2, அமெரிக்க ஓபன் 2, ஆஸ்திரேலிய ஓபன் 1) பெற்றுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg