Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஏ-9 வீதியில் விபத்து: மூவர் படுகாயம்

In இலங்கை
Published: 11:12 GMT, Jul 4, 2017 |
0 Comments
1667
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
kili accident (1)

கிளிநொச்சி ஏ-9 வீதியிலுள்ள அன்னை இல்லம் சந்திப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில், பாலர் பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்த சிறுவன் உள்ளிட்ட மூவர் படுகாயமடைந்து கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி 155ஆம் கட்டை பகுதியிலிருந்து கிளிநொச்சி சந்திப் பகுதி நோக்கி, இன்று (செவ்வாய்க்கிழமை) ஒரே திசையில் பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

முன்னால் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் பாலர் பாடசாலைக்கு திரும்ப முற்பட்ட போது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது. மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg