Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை எதிர்க்க வேண்டாம் என தயாரிப்பாளர்களுக்கு அச்சுறுத்தல்: டி. ராஜேந்தர்

In சினிமா
Published: 12:42 GMT, Jul 4, 2017 |
0 Comments
1148
This post was written by : Vithushagan
tr_12167

ஜி.எஸ்.டிக்கு எதிராக போராட்டம் நடத்தக்கூடாது என தயாரிப்பாளர்கள் அச்சுறுத்தப்படுவதாக டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை எதிர்ப்பு தெரிவித்து இன்று (செவ்வாய்க்கிழமை) சிறு தயாரிப்பாளர்கள் பலர் சென்னை ஜெமினி மேம்பாலம் அருகே உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்   அதில் கலந்து கொண்ட  டி. ராஜேந்தர்   செய்தியாளர்களிடம் பேசும் போது இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”நான் படித்த படிப்பு எனக்குப் பெயர் வாங்கித் தரவில்லை, எனக்குப் பெயர் வாங்கித் தந்தது இந்தத் திரைத்துறைதான். இன்று ஜி.எஸ்.டி. வரி, கேளிக்கை வரி என்று இரட்டை வரி முறையைக் கையாண்டிருக்கிறார்கள்.

இதனால், அதிக பாதிப்பு வரும். இரட்டை வரி, எங்களால் தாங்க முடியாத வலி. இதன்மூலம் சின்னத் தயாரிப்பாளர்கள் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள்.

இந்த வரியை எதிர்த்துப் போராட்டம் நடத்துவதற்குக்கூட இந்த அரசு அனுமதி அளிக்கவில்லை. ஜி.எஸ்.டி. வரி விதிப்பை எதிர்த்து திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. ஜி.எஸ்.டிக்கு எதிராக போராட்டம் நடத்தக்கூடாது என தயாரிப்பாளர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர்” என்று கூறினார்

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg