Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மீண்டும் ஒரு சரித்திரக்கதை கூறும் திரைப்படத்தில் நயன்தாரா

In சினிமா
Updated: 19:00 GMT, Jul 15, 2017 | Published: 12:15 GMT, Jul 15, 2017 |
0 Comments
1355
This post was written by : Kemasiya

ராமராஜ்யம் என்னும் சரித்திரக்கதை கூறும், தெலுங்கு படத்தில் நடித்த நயன்தாரா, மீண்டும் குருஷேத்திரா என்னும் சரித்திரக்கதை  சொல்லும் கன்னட படத்தில் நடிப்பதற்கு அரைவாசிச் சம்மதம் தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், என மூன்று மொழிகளிலும் வலம் வரும் நயன்தாரா, தற்பொழுது கன்னடத்தில் உருவாகவிருக்கும் குருஷேத்திரா என்னும் படத்திலும் நடிக்கவுள்ளார்.

நாகண்ணா பிரமாண்டமாக இயக்கவிருக்கும் சரித்திர கதை கூறும் திரைப்படம் குருஷேத்திரா. இந்த படத்தில் கன்னட நடிகர்களான தர்ஷன்- துரியோதனனாகவும், ரவிச்சந்திரன்- கர்ணனாகவும், மூத்த நடிகர் அம்ரீஷ்- பீஷ்மர் வேடத்திலும் நடிக்கவுள்ளனர்.

மேலும்- குறித்த படத்தில் நயன்தார பஞ்சபாண்டவர்களின் மனைவியான முக்கிய பாத்திரத்தை தலமை தாங்கவுள்ளார். ஆயினும் இது குறித்து நயந்தாரா இன்னும் உறிதியாக எந்தப் பதிலும் கூறவில்லை. ஏற்கனவே தெலுங்கு, மற்றும் தமிழில் வெளியாகிய ராமராஜ்யம் படத்தில் சரித்திரக் கதாநாயகி வேடம் ஏற்ற நயனுக்கு இது ஒன்றும் புதிதல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg