Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இடம்பெயர்ந்தவர்களை சொந்த இடங்களில் குடியமர்த்த வேண்டும்: ரவூப் ஹக்கீம்

In இலங்கை
Published: 16:18 GMT, Jul 4, 2017 |
0 Comments
1443
icon_com
This post was written by : Ravivarman

உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களை சொந்த இடங்களில் குடியமர்த்துவதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) வாக்காளர்களைப் பதிவு செய்வதற்கான விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வடக்கு கிழக்கினைப் பூர்விகமாக கொண்ட மக்கள் தமது சொந்த நிலங்களை விட்டு நாட்டின் வேறு பல மாவட்டங்களுக்கு சென்றிருக்கின்றார்கள். குறிப்பாக வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களில் ஆயிரக்கணக்கானவர்கள் தமது சொந்த நிலத்திற்கு மீண்டும் திரும்பும் பாரிய எதிர்பார்ப்புடன் புத்தளம் மாவட்டத்தில் வாழ்கின்றார்கள்.

வாக்காளர்களை பதிவுசெய்வதற்கான விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் கால எல்லை நான்கு வருடங்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, அக்காலப்பகுதிக்குள் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீண்டும் சொந்த இடத்தில் குடியேறுவதற்கான நிலைமைகளை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்” என அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg