Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மோடியின் வெளிநாட்டு பயணங்களால் பயன் எதுவும் இல்லை: காங்கிரஸ்

In இந்தியா
Updated: 05:26 GMT, Jul 5, 2017 | Published: 05:24 GMT, Jul 5, 2017 |
0 Comments
1270
This post was written by : Elakkiya

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணங்களால் பயன் எதுவும் இல்லை என காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அஜய் மக்கான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து டெல்லியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அஜய், மோடியின் வெளிநாட்டு பயணங்களால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மாத்திரமே நடந்துள்ளது. எனினும் இந்திய மக்களுக்கு பயன் எதுவும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கடந்த மூன்று ஆண்டுகளில் மோடி 64 முறை வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில் அமெரிக்கா, போர்த்துக்கல் மற்றும் நெதர்லாந்து என மூன்று நாடுகளுக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த பிரதமர் தற்போது மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயமாக இஸ்ரேல் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg