Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐ.நா. தீர்மானங்களை வடகொரியா கடுமையாக மீறியுள்ளது: சீனா- ரஷ்யா கண்டனம்

In உலகம்
Published: 06:03 GMT, Jul 5, 2017 |
0 Comments
1927
icon_com
This post was written by : Risha

வடகொரியாவின் ஏவுகணை சோதனையானது ஏற்றுக்கொள்ள முடியாததொன்றாகும் என்றும் ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானங்களை வடகொரியா கடுமையாக மீறியுள்ளது எனவும் சீனா மற்றும் ரஷ்யா கண்டனம் வெளியிட்டுள்ளது.

சீன மற்றும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) மொஸ்கோவில் கூட்டாக ஊடகவியலாளர்களை சந்தித்த போதே இவ்வாறு குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, கொரிய தீபகற்பத்தில் தற்போது தொடரும் பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தை நடத்துவது அவசியமாகும் என சீனா முன்மொழிந்துள்ளது.

மேலும், ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானங்களை வடகொரியா கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் இரு நாடுகளும் வலியுறுத்தின. இன்றேல் சர்வதேச சமூகத்தின் மேலும் பாரிய நெருக்கடியை வடகொரியா எதிர்கொள்ள நேரிடும் எனவும் எச்சரித்துள்ளன.

அத்துடன், நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதை நிரூபிக்கும் வகையில் வடகொரியா, சம்பந்தப்பட்ட நாடுகளை ஆத்திரமூட்டும் வகையில் செயற்படாது கட்டுப்பாடுடன் காணப்படுதல் அவசியம் என்றும் சீனாவும் ரஷ்யாவும் குறிப்பிட்டுள்ளன.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg