Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பெண்கள் உலக கோப்பை: இந்தியாவை எதிர்த்து இலங்கை

In கிாிக்கட்
Published: 06:10 GMT, Jul 5, 2017 |
0 Comments
2918
icon_com
This post was written by : Surenth
ICCwomens worldcup 2017 India vs Sri lanka

ஐ.சி.சி. பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 14ஆவது போட்டி இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் இன்று (புதன்கிழமை) நடைபெறவுள்ளது. உள்ளூர் நேரப்படி இன்று காலை 10.30 மணிக்கு இங்கிலாந்து, நொட்டிங்காம் கன்றி கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இலங்கை அணி சார்பில், குணரத்ன, ஹன்சிகா, ஜயங்கனி, காஞ்சனா, கௌசல்யா, குமாரிஹாமி, மாதவி, பெரெரா, பரபோதனி, ரனசிங்க, ரனவீர, ஸ்ரீவர்தன, சுரங்கிகா, வீரகொடி, எஸ்.எஸ். வீரகொடி ஆகியோரின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்திய அணியில், பிஷ்ட், கயக்வாட், கோஸ்வமி, ஜோஷி, கவுர், கிருஸ்னமூர்த்தி, மந்தனா, மேஷ்ராம், பாண்டே, பூனம் யாதவ், பர்வீன், ராஜ், ரௌட், ஷர்மா, வெர்மா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

இந்த தொடரின் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ள இந்திய அணியை வெற்றி கொள்ள இலங்கை அணி போராட வேண்டி ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg