Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சட்டவிரோத மண் அகழ்வால் சவாலுக்குள்ளாகும் இயற்கை

In இலங்கை
Published: 06:17 GMT, Jul 5, 2017 |
0 Comments
1254
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam

கிளிநொச்சியின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டவிரோத மண் அகழ்வால், பாரிய இயற்கை பாதிப்புகளுக்கு முகங்கொடுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக அக்கராயன்குளம் பகுதிக்கு ஆதவன் செய்திப்பிரிவு மேற்கொண்ட கள விஜயத்தின்போது, அங்கு மிகவும் மோசமான முறையில் மண் அகழ்வு இடம்பெற்று வருவதை காணக்கூடியதாக இருந்தது.

குறித்த பகுதியில் அமைந்துள்ள இயற்கை வளங்கள் மிகவும் மோசமான முறையில் சூரையாடப்பட்டு வருகின்ற நிலையில், இதுகுறித்து அக்கராயன்குளம் பொலிஸார், அரச அதிகாரிகள் உள்ளிட்டவர்களின் கவனத்திற்கு பலமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லையென மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

விடுதலை புலிகளின் காலத்தில் இவ்வாறான முறையற்ற மண்ணகழ்வுகள் இடம்பெறாத நிலையில், தற்போது இங்கு அள்ளப்படும் மணல் பிற மாவட்டங்களுக்கு அதிக விலைக்கு விற்கப்படுகின்றது.

இயற்கையாக கிடைக்கக்கூடிய இவ்வாறான வளங்களை முறையற்ற விதத்தில் அகழ்வதனால், உயர்ந்து வளர்ந்த மரங்கள் காணப்படும் இடங்களில் மண்ணரிப்பு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் மரங்கள் சாய்ந்து வீழ்ந்துள்ளன.

இந்நிலையில், பாரிய இயற்கை அழிவு ஏற்படுவதற்கு முன்னர் இவ்விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg