Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சவால்களை நாம் சிறப்பாக எதிர்கொள்வோம்: ட்ரம்ப்

In
Updated: 06:26 GMT, Jul 5, 2017 | Published: 06:26 GMT, Jul 5, 2017 |
0 Comments
1194
This post was written by : Risha

அமெரிக்கா எதிர்நோக்கும் சவால்களை தமது நிர்வாகம் சிறப்பாக கையாளும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தார் முன்னிலையில் ட்ரம்ப் ஆற்றிய முதலாவது சுதந்திர தின உரையின்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு மேலும் தெரிவித்த அவர், ”உங்கள் தளபதியாக செயற்படுவதைவிட மிகப்பெரிய பாக்கியம் எனக்கு வேறேதும் இல்லை. எனவே, இராணுவ வீரர்களான உங்களுடையதும், உங்களுடைய குடும்பத்தாருக்கும், உங்களது குறிக்கோளுக்கும் நான் பூரண ஆதரவு வழங்குவேன்.

நான் எப்போதும் உங்களுக்கு உறுதுணையாக செயற்படுவேன். அதேவேளை, நமது நாட்டின் பாதுகாப்புத்துறை சிறப்பாக செயற்பட்டு வருகிறது என்றும் இத்தருணத்தில் உங்களுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg