Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நிவாரண பணியில் ஈடுபட்டிருந்த இந்திய விமானப்படை உலங்கு வானூர்த்தி மாயம்

In இந்தியா
Updated: 09:56 GMT, Jul 5, 2017 | Published: 09:51 GMT, Jul 5, 2017 |
0 Comments
1083
icon_com
This post was written by : Elakkiya
chopper

கன மழை மற்றும் வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ள அசாம் மாநிலத்திற்கு நிவாரணப் பணிக்காக சென்ற இந்திய விமானப்படைக்கு சொந்தமான உலங்கு வானூர்த்தி மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மூன்று விமானப்படை வீரர்களுடன் பயணித்த எம்.ஐ-17 என்ற குறித்த உலங்கு வானூர்த்தி, அருணாசலப்பிரசேத்தில் நிவாரணப் பணிகளை நிறைவு செய்து அசாமின் சோனிட்பூர் மாவட்டத்தில் உள்ள சலோனிபரி ஐ.ஏ.எப் விமான தளத்திற்கு நேற்று மாலை திரும்பும் வழியில் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுன்றது.

அருணாச்சல பிரதேச பாபம்பரே மாவட்ட சாகலி அருகில் குறித்த விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தகவலை இழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், அசாம் மற்றும் அருணாச்சல பிரதேச பகுதிகளில் இராணுவம் மற்றும் துணை இராணுவ படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விமானத்தில் பயணித்த மூன்று இந்திய விமானப்படை வீரர்கள் குறித்த தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg