Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானியாவுக்கு ட்ரம்ப் இரகசிய விஜயம்: வெள்ளை மாளிகை மறுப்பு

In
Updated: 09:27 GMT, Jul 5, 2017 | Published: 09:26 GMT, Jul 5, 2017 |
0 Comments
1193
This post was written by : Risha

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், எதிர்வரும் வாரமளவில் பிரித்தானியாவுக்கு இரகசிய விஜயம் ஒன்றை மேற்கொள்ள உள்ளதாக வெளியான தகவல்களை வெள்ளை மாளிகை மறுத்துள்ளது.

மேலும், அண்மையில் பிரித்தானியாவிற்கு விஜயம் செய்வதற்கான எவ்வித திட்டங்களும் அமெரிக்க ஜனாதிபதிக்கு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் வார இறுதியில் ஜேர்மனியில் நடத்தப்படவுள்ள ஜி – 20 உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளும் பொருட்டு ஹம்பேர்க் செல்லவுள்ள ட்ரம்ப், அதன் பின்னர் பிரான்ஸின் தேசியதின விழாவில் கலந்துகொள்ளும் பொருட்டு பிரான்ஸிற்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளார். அதன் பின்னர் பிரித்தானியாவுக்கு முறைசாரா விஜயம் ஒன்றை மேற்கொள்வதற்கு அதிகளவான சாத்தியங்கள் இருப்பதாக பிரித்தானிய ஊடகமொன்று தெரிவித்தது.

ஆனால் குறித்த உண்மையில்லை எனத் தெரிவித்த வெள்ளை மாளிகையின் பிரதி ஊடகச் செயலாளர், இம்மாதத்திற்குள் பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயை சந்திப்பதற்கு ட்ரம்ப் திட்டமிடவில்லை எனக் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg