Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை : ருவான் விஜயவர்தன

In இலங்கை
Updated: 17:33 GMT, Jul 5, 2017 | Published: 17:33 GMT, Jul 5, 2017 |
0 Comments
1388
This post was written by : Vithushagan

கூட்டு எதிர்க்கட்சி மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,  ஆகியோர் படையினர் சம்பந்தமாக தற்போதைய அரசாங்கத்தின் மீது சுமத்தும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்ட செயலகத்தில் இராணுவத்தினருடன் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற விசேட சந்திப்பில் அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், ” தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், இலங்கை பாதுகாப்பு படையினருக்கு சர்வதேச நாடுகளில் வரவேற்பும், பயிற்சிகளை வழங்கும் வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன.

வெளிநாட்டு நீதிபதிகள் தீர்ப்புகளை வழங்கும் வகையிலான நீதிமன்றங்கள் இலங்கையில் ஸ்தாபிக்கப்பட மாட்டாது. பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியின் வழிக்காட்டலிலேயே அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

எனினும் தற்போதைய அரசாங்கம் செயற்பாடாத அரசாங்கம் தொடர்ந்தும் குற்றம் சுமத்தி வருகின்றனர். முன்னாள் ஜனாதிபதியும் கூட்டு எதிர்க்கட்சியும் அரசியல் இலாபம் கருதி அரசாங்கத்தை சீர்குலைக்க முயற்சித்து வருகின்றனர்.

கடந்த அரசாங்கம் உருவாக்கி பிரச்சினைகள் மற்றும் இராணுவத்தினரின் தீர்க்கப்படாத பிரச்சினைகளை தற்போதைய அரசாங்கமே தீர்த்து வருகிறது. இதனால், எந்த தரப்பு இந்த குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றது என்பதை முழு நாடும் அறியும்.

தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தி நாட்டை முன்னேற்றுவதே எங்களின் தேவை” என தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg