Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நீதி – சட்டம் ஒழுங்கு அமைச்சை ஜனாதிபதி பொறுப்பேற்க வேண்டும்: ஜே.வி.பி

In இலங்கை
Updated: 05:51 GMT, Jul 6, 2017 | Published: 03:23 GMT, Jul 6, 2017 |
0 Comments
1525
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
anura n maithri

ஊழல் மோசடிக்காரர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க, நீதி மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சை ஜனாதிபதியின் கீழ் கொண்டுவர வேண்டுமென மக்கள் விடுதலை முன்னணி கோரியுள்ளது.

நேற்றைய (புதன்கிழமை) நாடாளுமன்ற விவாதத்தில் அக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க இவ்வாறு குறிப்பிட்டார்.

கடந்த அமைச்சரவை கூட்டத்தின் போது, சட்டமா அதிபர் திணைக்களத்தையும் பொலிஸ் திணைக்களத்தையும் தனக்கு கீழ் கொண்டுவருமாறும், திருடர்களை பிடித்துக் காட்டுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், குறித்த இரு திணைக்களங்களை நிர்வகிக்கும் அமைச்சுக்கள் மீதான அதிருப்தி காரணமாகவே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளாரென தெரிவித்த அநுர, அவற்றை தான் பொறுப்பேற்க வேண்டுமென கோரியுள்ளார்.

மேலும் ஜனாதிபதியின் இக் கூற்றின் மூலம் இந்த அரசாங்கம் திருடர்களை பாதுகாத்து வருகின்றது என்பதும் புலனாகின்றதென அநுர குமார திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg