Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இஸ்ரேலுடனான ஒத்துழைப்புக்களை அதிகரிப்பதற்கு இந்தியா இணக்கம்

In இந்தியா
Published: 04:15 GMT, Jul 6, 2017 |
0 Comments
1237
icon_com
This post was written by : Elakkiya

வளர்ந்துவரும் பயங்கரவாதத்தை எதிர்த்து ஒத்துழைப்புக்களை அதிகரிப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இஸ்ரேல் பிரதமர் பென்சமின் நெதன்யாகு ஆகியோர் உறுதியளித்துள்ளனர்.

நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற கூட்டு செய்தியாளர் மாநாட்டில் இஸ்ரேல் பிரதமர் பென்சமின் நெதன்யாகு மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இணைந்து மேற்படி உறுதியளித்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த இந்திய பிரதமர் மோடி, ‘பிராந்திய மற்றும் ஸ்திரதன்மைக்கான நேரடி அச்சுறுத்தல்களை நாம் அறிந்திருக்கின்றோம். அதேபோன்று பயங்கரவாதத்தால் ஏற்படுத்தப்பட்ட வன்முறை மற்றும் வெறுப்புணர்வுகளை இஸ்ரேல் எதிர்கொண்டுள்ளது. எனவே பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ள இரு நாடுகளும் தமது மூலோபாய நலன்களை பாதுகாப்பதற்காக இணைந்து பணியாற்றுவதற்கு நாம் இணக்கம் கண்டுள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த இஸ்ரேல் பிரதமன் பென்சமின் நெதன்யாகு, நீர்வழங்கல், வேளாண்மை மற்றும் சுகாதார துறைகளில் இந்தியாவின் ஒத்துழைப்பு வேறுபாட்டை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலுக்கான பிரதமர் மோடியின் மூன்றுநாள் விஜயத்தின் ஒருபகுதியாக நேற்று இடம்பெற்ற இந்த சந்திப்பில் இருநாடுகளுக்கும் இடையில் விண்வெளித் துறை, விவசாய அபிவிருத்தி மற்றும் நீர் பாதுகாப்பு உள்ளடங்கலாக ஏழு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg