Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டெல்லி, மும்பையிலிருந்து இஸ்ரேலுக்கு விமான சேவை!

In இந்தியா
Published: 04:50 GMT, Jul 6, 2017 |
0 Comments
1237
icon_com
This post was written by : Elakkiya

இஸ்ரேலின் நிதி நகரமான டெல் அவிவிற்கு டெல்லி மற்றும் மும்பை ஆகிய இடங்களிலிருந்து விமான சேவை செயல்படுத்தப்படும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயமாக இஸ்ரேல் சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று (புதன்கிழமை) டெல் அவிவ் நகரில் இந்திய மக்களை சந்தித்து கலந்துரையாடியபோதே மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதன்போது, இருநாட்டும் மக்களிடையிலும் தொடர்புகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த விமான சேவையானது செயல்படுத்தப்படும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்தியாவின் வெளிநாட்டு குடிமக்களுக்கான அனுமதி அட்டையை (Overseas Citizen of India) பெறுவதற்கான விதிமுறைகளை இலகுவாக்குவதற்கு தமது நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அதன்படி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இஸ்ரேலியர்கள் மற்றும் இஸ்ரேலில் கட்டாய இராணுவ சேவையில் ஈடுபட்டுள்ளவர்களும் இந்த அனுமதி அட்டைய பெறமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் விசா இன்றி இந்தியா செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg