Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சீனாவும்- ஜேர்மனியும் புதிய சகாப்தத்திற்குள் நுழைந்துள்ளன: சீன ஜனாதிபதி

In உலகம்
Published: 04:26 GMT, Jul 6, 2017 |
0 Comments
1255
icon_com
This post was written by : Risha

சீனாவும், ஜேர்மனியும் உயர்மட்ட விரிவான மூலோபாய ஒத்துழைப்பிற்கான புதிய சகாப்தத்திற்குள் நுழைந்துள்ளதாக சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையரை நேற்று (புதன்கிழமை) பெர்லினில் சந்தித்து உரையாடிய போதே சீன ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதன்போது தொடர்ந்து தெரிவித்த சீன ஜனாதிபதி, ”இருநாட்டு மக்களும் நன்மையடையும் வகையில் உலக சமாதானம், ஸ்திரத்தன்மை என்பவற்றை ஒருங்கிணைத்து ஜேர்மனியுடனான ஒத்துழைப்பை விரிவுபடுத்த சீனா தயாராக உள்ளது.

அதன்படி இருதரப்பு ஒத்துழைப்பை உயர்மட்டத்தில் விரிவுபடுத்துவதற்கு மூலோபாய பரஸ்பர நம்பிக்கையை உறுதிபடுத்த வேண்டியதுடன், அபிவிருத்திக்கான உத்திகளை ஒருங்கிணைத்தலும் அவசியமாகும். அதுமாத்திரமன்றி மக்களிடையேயான பரிமாற்றங்கள் கலாசாரம் என்பவற்றையும் விரிவுபடுத்தல் வேண்டும்” என்றார்.

இதேவேளை, சீனாவுடனான உறவை மேம்படுத்துவதற்கு தாம் உறுதியாக இருப்பதாக ஜேர்மன் ஜனாதிபதியும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், ”கடந்த பல தசாப்தங்களாக இருதரப்பிற்கும் இடையிலான உறவு கணிசமான வளர்ச்சியை அடைந்துள்ளன. இருதரப்பிற்கும் இடையே பல்வேறு துறைகளில் பயனுள்ள ஒத்துழைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், சர்வதேச விவகாரங்களிலும் சிறந்த உறவு பேணப்பட்டு வருகிறது.

தொடர்ந்து உலக சமாதானம் மற்றும் அபிவிருத்திக்கு பூரண பங்களிப்பை வழங்கவும், சர்வதேச கட்டமைப்பின்கீழ் ஒத்துழைப்பை பலப்படுத்தவும் பீஜிங்குடன் இணைந்து பணியாற்ற பெர்லின் தயாராக உள்ளது” என்றும் குறிப்பிட்டார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg