Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

திறமையான வீரர்களை இலங்கை புறக்கணிக்கிறது: அர்ஜூன சாடல்

In கிாிக்கட்
Updated: 09:13 GMT, Jul 6, 2017 | Published: 06:06 GMT, Jul 6, 2017 |
0 Comments
1111
icon_com
This post was written by : Anojkiyan
arj

இயற்கையான துடுப்பாட்ட நுணுக்கங்களை கொண்ட தினேஸ் சந்திமால் மற்றும் லஹிரு திரிமன்னே ஆகியோரின் எதிர்காலத்தை இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு வீணடிப்பதாக அணியின் முன்னாள் தலைவரான அர்ஜூன ரணதுங்க கடுமையாக சாடியுள்ளார்.

இலங்கை கிரிக்கட் சபையின் தெரிவுக்குழுவின் தலைவர் சனத் ஜயசூர்யவின் பதவிக்காலம், மேலும் 6 மாதம் நீடிக்கப்பட்டுள்ளதன் பின்னணியில், இணையதளமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அர்ஜூன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்களான மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார ஆகியோருக்கு பிறகு தான் கண்ட இயற்கையான துடுப்பாட்ட நுணுக்கங்களை கொண்ட வீரர்கள் தினேஸ் சந்திமால் மற்றும் லஹிரு திரிமன்னே.
ஆனால் அவர்கள் தற்போது நடைபெற்றுவரும் சிம்பாப்வே அணிக்கெதிரான தொடரில் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் தலைவர் மவான் அத்தபத்து ஆறு இன்னிங்ஸில் 5இல் ஓட்டமெதுவும் பெறாத நிலையில் ஆட்டமிழந்தார். ஆனால் அவர் அதன் பின் எழுச்சி கண்டார். அதேபோல் அவர் ஓய்வு பெறும் போது 5500 டெஸ்ட் ஓட்டங்களை பெற்றிருந்தார். அதேபோல் இவ் இருவருக்கும் வாய்ப்பு கொடுத்தால் அவர்கள் எழுச்சி பெறுவார்கள்.

தெரிவுக் குழு தலைவரான சனத் ஜயசூர்ய இளம் வீரர்களை காப்பற்ற தவறிவிட்டார். 27வயதில் குமார் சங்கக்காரா மற்றும் அரவிந்த டி சில்வா இருந்ததை விட தினேஸ் சந்திமால் சிறந்த நிலையில் உள்ளார். அவர் நான்கு சதங்களை பூர்த்திசெய்துள்ளார்” என கூறினார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg