Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மெக்ஸிகோ துப்பாக்கிச்சூடு: சுமார் 14 பேர் உயிரிழப்பு

In உலகம்
Published: 06:21 GMT, Jul 6, 2017 |
0 Comments
1190
icon_com
This post was written by : Risha

மெக்ஸிகோவில் போதைப்பொருள் வன்முறை அதிகரித்து வருகின்ற நிலையில், வடக்கு மெக்ஸிகோவின் எல்லை மாநிலமான சிவாவாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் சுமார் 14 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் இரு ஆயுதக் குழுக்களுக்கு இடையே நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற வன்முறையின்போதே இந்த உயிரிழப்புகள் சம்பவித்துள்ளன.

துப்பாக்கிச்சூட்டில் சுமார் 14 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ள போதிலும் அந்த எண்ணிக்கையை உறுதிபடுத்த முடியாதுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, பலர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மெக்ஸிகோவில் இடம்பெற்றுவரும் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களை தடுப்பதற்கான ஒத்துழைப்பை வழங்குவது தொடர்பில் விவாதிப்பதற்காக அமெரிக்க உள்துறை பாதுகாப்பு செயலாளர் ஜோன் கெல்லியின் மெக்ஸிகோ விஜயத்தின்போதே இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg