Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சட்டவிரோத விலங்குகள் கொலைக்களங்களுக்கு அனுமதி இல்லை: யோகி ஆதித்யநாத்

In இந்தியா
Published: 06:33 GMT, Jul 6, 2017 |
0 Comments
1109
icon_com
This post was written by : Elakkiya

உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டவிரோத விலங்குகளை வெட்டும் இடங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

மாநிலத்தில் சட்டவிரோதமாக இடம்பெறும் விலங்குகள் படுகொலைகளை நிறுத்துமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டிருந்த நிலையில் மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ‘சட்டவிரோதமாக இயங்கும் இத்தகைய விலங்குகள் கொலைக்களங்கள் எதிர்காலத்தில் இயங்க முடியாது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பசுவதை என்பது இந்தியாவில் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதன்காரணமாக மனிதர்கள் கொல்லப்படும் சம்பவங்களும் ஆங்காங்கே இடம்பெற்று வருகின்றது.

கடந்த 2015-2016 நிதியாண்டில் 4 பில்லியன் டொலர் மதிப்புள்ள மாட்டிறைச்சி விற்பனை இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. எருமை இறைச்சி ஏற்றுமதியாளர்களில் இந்தியா மிகப்பெரிய இடத்தை வகிக்கின்றது. வியட்நாம், மலேசியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளே அதிகளவில் மாட்டிறைச்சியை வாங்குகின்றன.

இந்தியாவில் மாட்டிறைச்சி விற்பனையில் உத்தரபிரதேச மாநிலம் மிகப்பெரும் பங்கு வகிக்கின்றது. கடந்த 2015-2016 நிதியாண்டில் 5 லட்சத்திற்கும் மேலதிகமான மெற்றிக் தொன் மாட்டிறைச்சி உத்தரபிரதேசத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg