Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட தேவைகள் கருத்திற்கொள்ளப்பட வேண்டும்

In
Updated: 07:54 GMT, Jul 6, 2017 | Published: 07:54 GMT, Jul 6, 2017 |
0 Comments
1253
This post was written by : Risha

கிரன்ஃபெல் குடியிருப்பு கட்டட தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீடுகளை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கையின் போது, ஒவ்வொருவரதும் தனிப்பட்ட தேவைகள் கருத்திற் கொள்ளப்படல் அவசியம் என கிரன்ஃபெல் தீயணைப்பு குழு உறுப்பினர் எலியானோர் கெல்லி குறிப்பிட்டுள்ளார்.

ஊடகமொன்றுக்கு அவர் நேற்று (புதன்கிழமை) வழங்கிய செவ்வியின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”கடந்த ஜூன் மாதம் 14ஆம் திகதி ஏற்பட்ட அனர்த்தத்தில் 158 குடும்பங்கள் தங்களது வீடுகளை இழந்தனர். அவர்களுள் 139 குடும்பங்களுக்கான தற்காலிக தங்குமிட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட போதிலும், அதனை 14 பேர் மாத்திரமே ஏற்றுக்கொண்டனர்.

இந்நிலையில், அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூன்று வாரங்களுக்குள் சிறந்த தற்காலிக வீடுகள் பெற்றுக்கொடுக்கப்படும் என தீ விபத்து சம்பவித்த ஒருசில தினங்களில் பிரதமர் தெரேசா மே வாக்குறுதியளித்தார்.

ஆனால், குறித்த காலக்கெடு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை. தற்காலிக தங்குமிட வசதிகளை மக்கள் நிராகரித்துள்ள நிலையில், மக்களின் தனிப்பட்ட தேவைகளை கருத்திற் கொண்டு அவர்களுக்கான வீடுகள் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்” என்றும் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg