Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நயன்தாராவின் அம்மாவாக நடிக்க ஆசைப்படும் பிரபல நடிகை!

In சினிமா
Updated: 15:13 GMT, Jul 10, 2017 | Published: 10:26 GMT, Jul 10, 2017 |
0 Comments
1367
icon_com
This post was written by : Vithushagan
1494640993

அம்மா, மகளாக நடிக்க நாங்கள் சரியாக இருப்போமா என்ற கேள்வியுடன் நடிகை நயன்தாராவுடன் எடுத்த போட்டோ ஒன்றை நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் டுவீட் செய்துள்ளார்.

தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் எனப்படு்ம் சைமா விருதுகள் 2017 கடந்த ஜூன் 30 மற்றும் ஜூலை 1ஆம் திகதி வரை அபுதாவியில் நடைபெற்றது. இதில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா மற்றும் நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணனும் கலந்து கொண்டனர்.

விழாவின் போது லட்சுமி ராமகிருஷ்ணன் நடிகை நயன்தாராவிடம் தன் மொபைல் போனை காட்டி பேசுவது போன்ற போட்டோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் அந்த போட்டோவுக்கு கேப்ஷனாக அம்மா, மகளாள நடிப்பதற்கு விருப்பம் இருந்தால் எங்களை தேர்வு செய்து கொள்ளலாம் என்ற ரீதியில் கொடுத்திருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலரும் லைக் செய்து, ரீடுவீட் செய்து வருகின்றனர்.

1494640993

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg