Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உடற் பயிற்சி செய்யும் பொழுது கவனிக்க வேண்டிய விடயங்கள்

In
Updated: 11:45 GMT, Jul 6, 2017 | Published: 11:45 GMT, Jul 6, 2017 |
0 Comments
1213
icon_com
This post was written by : Kemasiya
20141224-042111-h_520x356

உடலின் கட்டமைப்பிற்கு மாத்திரமின்றி, பல்வேறு பட்ட நோய்களில் இருந்தும் எம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு உடற்பயிற்சி துணைபுரிகின்றது. எமது சக்தியை வீண் விரயம் செய் து களைப்பு அதிகரிக்கும்படி உடற்பயிற்சி செய்யும் நாம், அதன் மூலம் பலனடைகின்றோமா என்பதையும் அவதானிக்க வேண்டும்.

ஆகையினால் உடற்பயிற்சி செய்யும் பொழுது கீழ் வரும் விடயங்களை கருத்தில் கொண்டு செயற்படுவோமாக இருப்பின் நிச்சயமாக பலன் பெற முடியும்.

1-உடற்பயிற்சி செய்யும் பொழுது தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். உடற்பயிற்சி செய்து முடித்த அரை மணி நேரங்களிற்கு பின்னர் சுடு தண்ணீர் குடிக்க வேண்டும்.

2.நாம் உடல் பருமனை கருத்தில் கொண்டு உடற் பயிற்சி செய்வோமாக இருப்பின், கொழுப்பு உணவுகளை தவிர்ப்பதுடன் கடையில் வாங்கி சாப்பிடும் பழக்கத்தை முழுமையாக விட வேண்டும்.

3.உடற் பயிற்சி செய்யும் எவருமே, பயிற்சி முடிந்தவுடன் 2மணி நேரத்திற்கு தூங்குவது கூடாது. அதனால் தான் காலையில் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பார்கள்.

4.எமது தேவையை அறிந்து வைத்தியர்களின் ஆலோசனையை பெற்ற பயிற்சிகளில் ஈடுபடுதல் வேண்டும்.

5.பயிற்சியின் பொழுது உடலில் இறுக்கம் இல்லாது, இலகவான ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும். சுவாசிப்பதில் மிக இலகுவான உணர்வை பெறும் வகையில் உங்கள் ஆடை இருக்க வேண்டும்.

6.பயிற்சி செய்து முடித்தவுடன் மூச்சுப் பயிற்சி இன்றியமையாதது.

7.உடற் பயிற்சியின் பின்னர் உடனடியாக குளிப்பதை தவிர்த்தல் வேண்டும்.

இவை சாதாரணமாக எந்தவொரு தேவைக்காக உடற்பயிற்சியை செய்தாலும் கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள். உடற்பருமன், நீரிழிவு, மற்றும் உயர் குருதி அமுக்கம், என்று எந்த நோய்க்காக வைத்தியரிடம் சென்றாலும் அவர்களும் இந்த நிபந்தனைகளை சிபார்சு செய்கின்றனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg