Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் குதிக்கவுள்ள வருமான வரித் திணைக்கள அதிகாரிகள்

In இலங்கை
Updated: 04:24 GMT, Jul 7, 2017 | Published: 04:19 GMT, Jul 7, 2017 |
0 Comments
1241
icon_com
This post was written by : Risha
strike

உள்நாட்டு வருமான வரித் திணைக்கள அதிகாரிகள் இன்று (வெள்ளிக்கிழமை) அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக வருமான வரித் திணைக்கள தொழிற்சங்க கூட்டமைப்பின் இணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் முன்வைக்கப்பட்ட உள்நாட்டு வருவமான வரி சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

புதிய வரு­மான வரி திருத்த சட்­ட­மூ­லத்­தினால் மக்­களின் அத்­தி­யா­வ­சிய பொருட் களின் விலை­யா­னது மேலும் பாரி­ய­ளவில் அதி­க­ரிக்கும் வாய்ப்­புள்­ளது. இது தொடர்பில் அர­சாங்கம் எம்­முடன் பேச்­சுக்­களை நடத்­தா­விடின் தொழிற்­சங்க போராட்டம் தீவி­ர­ம­டையும் எனவும் தேசிய வரு­மான வரி திணைக்­க­ளம் எச்சரித்துள்ளது.

இதேவேளை, கனிய எண்ணெய் தொழிற்சங்கத்தினரும் மீண்டும் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை – சீனன்குடா எண்ணெய் களஞ்சிய தொகுதியை இந்தியாவிற்கு கையளிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே கனிய எண்ணெய் தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்தியிருந்தனர்.

இந்நிலையில் குறித்த விவகாரம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதியும் பிரதமரும் சந்தர்ப்பம் வழங்காமை காரணமாக மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg