Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கு அபராதம்

In கிாிக்கட்
Published: 05:57 GMT, Jul 7, 2017 |
0 Comments
1261
icon_com
This post was written by : Anojkiyan
CRICKET-SRI-ZIM

சிம்பாப்வே அணிக்கெதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில், மந்த கதியில் ஓவர்களை வீசிய குற்றத்திற்காக இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அனைத்து ஓவர்களும் வீச கொடுக்கப்பட்ட நேர அவகாசத்திற்குள் ஒரு ஓவர் குறைவாக வீசியிருந்தாக இலங்கை அணி மீதான குற்றச்சாட்டினை நிரூபனம் ஆகியுள்ளது.

இதன் காரணமாக அணித்தலைவர் ஏஞ்சலோ மெத்திவ்ஸிற்கு போட்டிச் சம்பளத்தில் 20 சதவிதமும், இலங்கை அணியின் ஏனைய வீரர்கள் அனைவரும் 10 சதவிதமும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

மெத்திவ்ஸ் தலைமையிலான இலங்கை அணி எதிர்வரும் 12 மாதங்களிற்குள் இவ்வாறான குற்றமொன்றினை மீண்டும் செய்யும் பட்சத்தில், அது இரண்டாம் குற்றமாக கருதப்பட்டு மெத்திவ்ஸ் போட்டித் தடையினை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg