Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஈரானில் 21 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைது

In உலகம்
Updated: 07:23 GMT, Jul 7, 2017 | Published: 07:22 GMT, Jul 7, 2017 |
0 Comments
1173
icon_com
This post was written by : Elakkiya
1207a1e4-d8a9-4cf2-96e5-cae7ba967a1a

ஈரானில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதற்கு திட்டமிட்டதாக 21 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக நீதித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று (வியாழக்கிழமை) ஈரானின் வடகிழக்கு நகரான மஷஹட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் தற்கொலைக் குண்டுத்தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு தாக்குதல்களை நடத்துவதற்கு திட்டமிட்டிருந்ததாக மஷஹாட்டின் துணை வழக்கறிஞர் ஹசான் ஹைதரி தெரிவித்துள்ளார்.

மேலும், கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளில் ஈரானைச் சேர்ந்தவர்களும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்களும் உள்ளடங்குவதாகவும் இவர்கள் அனைவரும் போலி ஆவணங்களை காட்டி நாட்டினுள் நுழைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் தலைநரான தெஹ்ரானில் அண்மையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து ஈரானிய உறவுத்துறை படையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். இதன் ஒருபகுதியாக நேற்றைய தினம் இந்த கைது நடவடிக்கைகள் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg