Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விம்பிள்டன் டென்னிஸ்: ராட்வன்ஸ்கா-கரோலினா பிளிஸ்கோவா மூன்றாம் சுற்றுக்கு முன்னேற்றம்

In டெனிஸ்
Published: 09:39 GMT, Jul 7, 2017 |
0 Comments
1084
icon_com
This post was written by : Anojkiyan
Wimbledon-logo

லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் குஸ்னெட்சோவா, ராட்வன்ஸ்கா மற்றும் கரோலினா பிளிஸ்கோவா ஆகியோர் மூன்றாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இரண்டாவது சுற்று போட்டியில் ரஷ்ய வீராங்கனை குஸ்னெட்சோவா 6-0, 7-5 என்ற நேர் செட்டில் சக நாட்டு வீராங்கனையான மகரோவாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் தரவரிசையில் 10வது இடத்திலிருக்கும் போலந்தின் அக்னீஸ்கா ராட்வன்ஸ்கா, அமெரிக்காவின் மெக்ஹாலேவை 5-7, 7-6 (9-7), 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி மூன்றாம் சுற்றுக்கு முன்னேறினார்.

அதேபோல் செக்குடியரசின் 3ஆம் நிலை வீராங்கனையான கரோலினா பிளிஸ்கோவா6 -3, 5-7, 2-6 என்ற செட் கணக்கில் சுலோவக்கியாவின் ரைபரிகோவாவிடம் தோல்வியடைந்தார்.

இதே போல் செக்குடியரசின் பெட்ரா குவிடோவா 3-6, 6-1, 2-6 என்ற என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் மேடிசன் பிரங்கிளிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg