Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜப்பானில் வெள்ள அனர்த்தம்: 22 பேரை காணவில்லை

In
Updated: 08:21 GMT, Jul 7, 2017 | Published: 08:21 GMT, Jul 7, 2017 |
0 Comments
1330
This post was written by : Elakkiya

ஜப்பானின் தென்மேற்கு பகுதிகளில் ஏற்பட்டுள்ள கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக பெருமளவான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். அசாகுரா நகரில் இன்றும் (வெள்ளிக்கிழமை) மழை தொடர்ந்து பெய்து வருவதால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

வெள்ளப் பெருக்கு மற்றும் பலத்த மழை காரணமாக குறைந்தது ஆறு பேர் உயிரிழந்துள்ளதாகவும் 22 பேரை காணவில்லை என்றும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அதேவேளை இதுவரை 80 ஆயிரம் மக்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்பு பணிகள் மூன்றாவது நாளாக இன்று முன்னெடுக்கப்படுகின்ற நிலையில், மீட்பு பணிகளில் இராணுவ வீரர்கள், பொலிஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் என ஆயிரக்கணக்கானோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். .

குறித்த பகுதியில் தொடர்ந்து மழை பெய்துவருவதால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg