Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இனி வரும் போட்டிகளில் இவ்வாறானதொரு தவறு இடம்பெறாது: மெத்தியூஸ்

In கிாிக்கட்
Published: 10:13 GMT, Jul 7, 2017 |
0 Comments
1127
icon_com
This post was written by : Anojkiyan
India ICC World T20 Cricket

சிம்பாப்வே அணிக்கெதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் செய்த தவறை இனி வரும் போட்டிகளில் செய்யமாட்டோம் என இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ் தெரிவித்துள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், மந்த கதியில் ஓவர்களை வீசிய குற்றத்திற்காக இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில் இப்போட்டியின் பின் நிருபர்களிடம் கருத்து தெரிவித்த மெத்தியூஸ்,

“நமக்கு ஓவர்கள் வீச அளிக்கப்பட்டிருந்த நேரத்திற்குள் ஒரு ஓவர் குறைவாக வீசியிருந்தோம். அந்நேரத்தில், போட்டி நடுவரும் அபாரதம் பற்றி எமக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இது பற்றி நாம் விரிவாக கலந்துரையாடியுள்ளோம். இனி வரும் போட்டிகளில் இவ்வாறானதொரு தவறு இடம்பெறாது என நம்புகின்றேன்” என கூறினார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg