Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலக அரங்கில் பிரித்தானியா தைரியமாக பயணிக்கும்: பிரதமர் தெரேசா

In
Updated: 10:11 GMT, Jul 7, 2017 | Published: 10:10 GMT, Jul 7, 2017 |
0 Comments
1264
icon_com
This post was written by : Elakkiya
mnk

பிரெக்சிற்றினால் பிரித்தானியா சர்வதேச செல்வாக்கை இழக்கின்றது என்று கூறப்படும் நிலையில் அதனை மறுத்துள்ள பிரதமர் தெரேசா மே, சர்வதேச அரங்கில் பிரித்தானியா தொடர்ந்து தைரியமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியின் ஹம்பேர்க் நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகியுள்ள ஜி-20 தலைவர் மாநாட்டில் உரையாற்றி தெரேசா மே, சுதந்திர வர்த்தகம் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் போன்றவற்றில் பிரித்தானியா முக்கிய பங்குவகிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பொதுத்தேர்தலின் பின்னர் பிரித்தானியாவின் எதிர்காலம் குறித்து விவாதிக்கப்படுகின்ற நிலையில் தெரேசா மே மேற்படி கருத்து தெரிவித்துள்ளார்.

இன்று ஆரம்பமாகியுள்ள ஜி-20 தலைவர் மாநாடு நாளையும் நடைபெறவுள்ள நிலையில், காலநிலை மாற்றம் குறித்த பரிஸ் உடன்படிக்கையில் அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு தெரேசா மே அழுத்தம் கொடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg