Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வட. மாகாணத்தின் தேவைகள் குறித்து பா.ஜ.க. தலைவர் கலந்துரையாடல்

In இலங்கை
Updated: 10:05 GMT, Jul 7, 2017 | Published: 10:04 GMT, Jul 7, 2017 |
0 Comments
1151
icon_com
This post was written by : Risha
thami1

வட. மாகாணத்தின் தேவைகள் மற்றும் போருக்கு பின்னரான மக்களின் வாழ்க்கை நிலை என்பன தொடர்பில் பாரதிய ஜனதாக கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வட. மாகாண சபை உறுப்பினர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

பா.ஜ.க. தமிழக தலைவருக்கும், வட. மாகாண சபை உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு கைதடியில் அமைந்துள்ள வட. மாகாண சபைக் கட்டத்தில் நேற்றிரவு (வியாழக்கிழமை) இடம்பெற்றிருந்தது.

குறித்த சந்திப்பின்போது, வட. மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் உள்ளிட்ட மாகாண சபை உறுப்பினர்கள் பலர் கலந்துக் கொண்டிருந்தனர்.

வட. மாகாண அமைச்சர்களுடனான சந்திப்பிற்கு முன்னர் பா.ஜ.க. தமிழக தலைவர், வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவரது உத்தியோகப்பூர்வ இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

thami

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg