Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லைக்கா புரடக்சன்சின் 2.0 திரைப்படம் இசையில் புதிய சாதனை- மனம் திறந்தார் ஏ.ஆர்.ரஹ்மான்

In இலங்கை
Published: 12:13 GMT, Jul 7, 2017 |
0 Comments
1898
icon_com
This post was written by : Risha

லைக்கா புரடக்சன் நிறுவனத்தின் தயாரிப்பில் சுப்பர் ஸ்டார் ரஜனிகாந் நடிப்பில் வெளிவரவுள்ள 2.0 என்ற திரைப்படம் இசைத்துறையில் புதிய ஓர் அத்தியாயமாக அமையும் என ஒஸ்கார் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

ஆதவன் தொலைக்குக்காட்சிக்கு அவர் வழங்கிய விசேட நேர்காணலில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஏ.ஆர்.ரகுமானின் முழுமையான பேட்டி இன்றிரவு 8.30 இற்கும், மறு ஒளிபரப்பு நாளைக் காலை 9.30 இற்கும் ஆதவன் தொலைக் காட்சியில் ஒளிபரப்பாக உள்ளமை குறிப்பிடத் தக்கது.

தனது கால் நூற்றாண்டுத் திரை இசை வரலாற்றில் 2.0 திரைப்படம் புது அனுபவத்தை தந்ததாக அவர் தெரிவித்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் லைக்கா புரடக்சன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிவரும் 2.0 என்ற திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ள நிலையில் தனது இசைப் பயணம் தொடர்பில் மனம் திறந்துபேசியுள்ளார்.

இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் முற்றுமுழுதாக புதிய 3டி டிஜிட்டல் தொழிநுட்பத்தில் 2.0 திரைப்படம்திரையாக்கப்பட்டுவருகின்றது. இதில் ஹொலிவுட் நடிகர் அக்ஷய்குமார், எமி ஜக்சன், உட்பட பல பிரபல நடிகர்கள் சூப்பர் ஸ்டார் ரஜனி காந்துடன் இணைந்து நடித்துள்ளனர்.

அடுத்த ஜனவரி மாதம் 2.0 திரைப்படம் திரைக்கு வரும் என லைக்கா புரடக்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழ்த் திரை ரசிகர்கள் உட்பட சீனா ஜப்பான் உள்ளிட்ட வெளிநாட்டு ரசிகர்களும் 2.0 திரைப்படத்தின் வெளியீட்டிற்காய் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg