Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானியாவில் பயங்கரவாதத்தை பரப்புவதில் சவுதியின் பங்களிப்பு

In
Updated: 11:53 GMT, Jul 7, 2017 | Published: 11:52 GMT, Jul 7, 2017 |
0 Comments
1718
This post was written by : Elakkiya

பிரித்தானியாவில் இஸ்லாமிய பயங்கரவாதத்தை பரப்புவதற்கு அதிக நிதி அளிக்கும் நாடுகளில் சவுதி அரேபியா முதலிடம் வகிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து அண்மையில் வெளியாகிய ஆய்வுத் தகவல்களின் பிரகாரம், பிரித்தானியாவிற்கு சவுதி அரேபியா அதிக நிதியுதவியை வழங்கி மத அடிப்படைவாதங்களை ஊக்குவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பிரித்தானியாவில் உள்ள மசூதிகளுக்கு நிதி உதவி வழங்குவது, இஸ்லாமிய கல்வி நிலையங்களுக்கு நிதி வழங்குதல், மற்றும் மத குருக்களுக்கு பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள சவுதி வழியமைத்து கொடுப்பதாக கூறப்படுகின்றது.மேலும் இவ்வாறான விடயங்கள் கடந்த 60 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கத்தேய நாடுகளில் தனித்துவமான இஸ்லாமிய சமூகத்தை உருவாக்க மத்திய கிழக்கு நாடுகள் முயன்று வருகின்ற நிலையில், பிரித்தானியாவிற்கு மாத்திரமன்றி ஐரோப்பிய நாடுகள் சிலவற்றிற்கும் இவ்வாறு அதிகளவில் நிதியளிக்கப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg