Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எமது தலைமைகளே எமக்குத் துரோகம் செய்கின்றன: கஜேந்திரகுமார்

In இலங்கை
Updated: 17:27 GMT, Jul 7, 2017 | Published: 15:41 GMT, Jul 7, 2017 |
0 Comments
1173
icon_com
This post was written by : Ravivarman
111

துரோகம் செய்வது சிங்கள அரசு அல்ல, எமது தலைமைகளே எமக்குத் துரோகம் செய்கின்றன என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் இன்றையதினம் (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஒற்றை ஆட்சியின் கீழான தீர்வை ஏற்றுக்கொள்ளாத எம்மைக் கொண்டே இன்றுள்ள எமது தலைவர்களால் தீர்வு திணிக்கப்படுகின்றது, எமக்கு துரோகம் செய்வது சிங்கள அரசு அல்ல, எமது தலைமைகளே.

இன்று புதிய அரசியலமைப்பை உருவாக்கி அதில் தமிழிலும், ஆங்கிலத்திலும் ஒற்றை ஆட்சி என்ற பதம் நீக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். இவ்வாறு உருவாக்கப்படும் எல்லா அரசியலமைப்புக்களின் கீழ்ப்பகுதியிலும் தமிழ், ஆங்கில மொழிகளில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களில் கருத்து வேறுபாடுகள் இருப்பின் சிங்கள மொழியில் உள்ளதே ஏற்றுக்கொள்ளப்படும்.

அவ்வாறு இரு மொழிகளிலும் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் ஒற்றை ஆட்சி என்ற பதம் சிங்கள மொழியில் உள்ளமையால் அதுவே அரசியலமைப்பில் அங்கீகரிக்கப்பட்டதாக இருக்கும்” என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் தெரிவித்தார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg