Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

துணை ஜனாதிபதி தேர்தலுக்கு 9 பேர் வேட்பு மனு தாக்கல்

In இந்தியா
Published: 04:16 GMT, Jul 8, 2017 |
0 Comments
1211
icon_com
This post was written by : Surenth
Hamid Ansari

துணை ஜனாதிபதி தேர்தலுக்கு 9 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ள நிலையில், இதில் நான்கு பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துணை ஜனாதிபதி ஹமீட் அன்சாரியின் பதவி காலம் ஒகஸ்ட் 10ஆம் திகதியுடன் முடிவடையவுள்ள நிலையில்,  புதிய துணை ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் ஓகஸ்ட் 5ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் மக்களவை மற்றும் மேல் சபை உறுப்பினர்கள் மாத்திரம் வாக்களிக்க முடியும். நாடாளுமன்றத்தில் உள்ள குறித்த இரு சபைகளிலும் உள்ள 790 உறுப்பினர்கள் வாக்களிக்க உள்ளனர்.

இந்த நிலையில், குறித்த இரு சபைகளிலும் பா.ஜ.க. உறுப்பினர்கள் அதிகம் உள்ளமையால் துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க.விற்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, துணை ஜனாதிபதிக்கான வேட்பாளரின் பெயரை பாரதிய ஜனதா கட்சி அடுத்த வாரம் அறிவிக்கவுள்ளதாக கட்சி வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg