Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எல் சல்வடோர் நிதி அமைச்சகத்தில் தீ: இருவர் உயிரிழப்பு, 22 பேர் காயம்

In
Updated: 04:59 GMT, Jul 8, 2017 | Published: 04:59 GMT, Jul 8, 2017 |
0 Comments
1515
This post was written by : Sylviya

எல் சல்வடோரின் நிதி அமைச்சகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, இருவர் உயிரிழந்துள்ளதோடு 22 பேர் காயமுற்றுள்ளனர்.

குறித்த தீ விபத்து நேற்று (வெள்ளிக்கிழமை) சான் சல்வடோர் பகுதியில் உள்ள ஒன்பது மாடிக் கட்டடத்தில் ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்து தொடர்பில் கருத்து தெரிவித்த எல் சல்வடோரின் ஜனாதிபதி சல்வடோர் சன்செஸ் செரென் (Salvador Sanchez Ceren), “உயிரிழந்தவர்களில் ஒருவர் பெண். அவர் தொழிற்சங்க தொழிலாளி ஆவார். மற்றையவர், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த போது உயிரிழந்துள்ளார். காயமுற்றவர்களில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது” என தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர் ஒருவர் இது குறித்து கருத்து தெரிவித்த போது, “கட்டடத்தின் மூன்றாவது மாடியில், எரிகாயங்கள் மற்றும் மூச்சுத்திணறலுக்கு உள்ளாகி ஒருவர் உயிரிழந்தார். ஜனாதிபதியும் அவரைப் பற்றியே தகவல் தெரிவித்தாரா என்பது இதுவரை கண்டறியப்படவில்லை” என தெரிவித்தார்.

இதே வேளை, தீப்பிடித்து எரிந்த குறித்த கட்டடத்திலிருந்து தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு பலர் குதித்ததாகவும் அதனால் கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg