Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜம்மு காஷ்மீரில் தாக்குதல்: பொதுமக்கள் இருவர் உயிரிழப்பு

In இந்தியா
Published: 04:31 GMT, Jul 8, 2017 |
0 Comments
1264
icon_com
This post was written by : Surenth

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு தாக்குதலில் பொதுமக்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த பகுதியில் இன்று (சனிக்கிழமை) காலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதாக இந்திய பாதுகாப்பு தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் இராணுவத்தின் இந்த துப்பாக்கி சூட்டு தாக்குதலுக்கு இந்திய பாதுகாப்பு வீரர்கள் பதிலடி கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய நிலைகள் மற்றும் சக்கா தா பாக், கர்ரி கர்மாரா பகுதி கிராமங்களை இலக்கு வைத்து பாகிஸ்தான் இராணுவத்தினர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதேவேளை, பந்திபோரா மாவட்டத்தில் இராணுவ வீரர்களின் பாதுகாப்பு வாகனங்களை இலக்கு வைத்து நேற்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு பாதுகாப்பு வீரர்கள் காயம் அடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg