Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜி – 20 உச்சிமாநாடு: வடகொரியாவின் ஏவுகணை சோதனை தொடர்பில் முக்கிய கவனம்

In உலகம்
Updated: 06:13 GMT, Jul 8, 2017 | Published: 06:13 GMT, Jul 8, 2017 |
0 Comments
1465
This post was written by : Sylviya

ஜேர்மனியின் ஹம்பேர்க் நகரில் ஆரம்பமான ஜி – 20 உச்சிமாநாட்டின் போது, வடகொரியாவின் ஏவுகணை சோதனை தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

குறித்த ஜி – 20 உச்சிமாநாடு நேற்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பிக்கப்பட்ட நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன் ஆகியோர் வடகொரியாவின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவது தொடர்பில் குறித்த மாநாட்டிற்கு புறம்பாக நடத்தப்பட்ட சந்திப்பின் போது கலந்தாலோசித்துள்ளனர்.

வடகொரியாவினால் அண்மையில் நடத்தப்பட்ட ஏவுகணைச் சோதனை தொடர்பில் கருத்து தெரிவித்த புடின், “அண்மையில் நடத்தப்பட்ட ஏவுகணைச் சோதனை கண்டிக்கத்தக்கது. இது ஒரு பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. சர்வதேசம் அமைதியாகவும் புத்திசாலித்தனத்துடனும் குறித்த விடயத்திற்கு தீர்வு காண வேண்டும்” என தெரிவித்தார்.

வடகொரியாவின் ஏவுகணை சோதனை நடவடிக்கை தொடர்பில் கருத்து தெரிவித்த தென்கொரிய ஜனாதிபதி, “குறித்த ஏவுகணை மற்றும் அணுவாயுத சோதனை நடவடிக்கை கொரிய தீபகற்பத்திற்கு மட்டுமல்லாது முழு வடகிழக்கு ஆசியாவுக்கும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது” என தெரிவித்தார்.

வடகொரியாவில் கடந்த 4 ஆம் திகதி நடத்தப்பட்ட ஏவுகணை சோதனை நடவடிக்கை வெற்றியளித்துள்ள நிலையில், அது அலஸ்கா மற்றும் ஹவாய் தீவுகளை எளிதில் அடையக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது எனவும் பாரிய அணுவாயுத போராயுதத்தை சுமந்து செல்லக்கூடியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg