Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்

In இந்தியா
Updated: 07:52 GMT, Jul 8, 2017 | Published: 06:33 GMT, Jul 8, 2017 |
0 Comments
1380
This post was written by : Surenth

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் இலங்கை நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த தீர்மானித்துள்ளதாக த.ம.க. தலைவர் திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார். குறித்த ஆர்ப்பாட்டம் எதிர்வரும் 10ஆம் திகதி நடத்தப்படும் என அவர் இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களின் படகிற்கு 10 இலட்சம் முதல் 10 கோடி வரையிலும் இலங்கை ரூபாய் பெறுமதியில் அபராத தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடும் தமிழக மீனவர்களுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலத்தை நிறுத்த வேண்டிய முழு பொறுப்பும் மத்திய அரசுக்கு இருக்கிறது.

இதற்கு இலங்கை அரசு மறுக்குமானால் இந்திய-இலங்கை அரசுகளுக்கிடையே கடந்த 1974, 1976ஆம் ஆண்டுகளில் கச்சத்தீவு குறித்து செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வோம் என்று மத்திய அரசு, இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விடுக்கவேண்டும்.

பா.ஜ.க. ஆட்சி அமைந்த கடந்த 3 ஆண்டுகளில் தமிழக மீனவர்களின் 150இற்கும் மேற்பட்ட படகுகள் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த படகுகள் இலங்கை கடற்கரை பகுதிகளில் கேட்பாரற்று கிடக்கின்றன. மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை விடுதலை செய்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg