Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜெயம் ரவிக்கு ஜோடியானது எனது அதிர்ஷ்டம்: சாயிஷா

In சினிமா
Updated: 14:49 GMT, Jul 11, 2017 | Published: 09:01 GMT, Jul 11, 2017 |
0 Comments
1905
icon_com
This post was written by : Ravivarman
210225428

என்னைப் போன்ற மொழி தெரியாத புதுமுகத்துக்கு ஜெயம் ரவியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை பெரிய அதிர்ஷ்டமாக கருதுகிறேன் என நடிகை சாயிஷா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கையில், “தெலுங்கு, இந்தி படங்களில் நடித்துள்ள எனக்கு ‘வனமகன்’ படத்தில் தமிழ் முன்னணி நடிகர் ஜெயம்ரவியுடன் ஜோடி சேர்ந்து நடித்தது மகிழ்ச்சியாக இருந்தது. அவர் அறிமுகம் இல்லாதவர் என்பதால் முதலில் ஒருவித அச்சம் ஏற்பட்டது. ஆனால் நான் சந்தித்த முதல் நாளே அவர் சகஜமாக பழகினார்.

தமிழுக்கு நான் புதுவரவு. என்றாலும், எந்தவித ஈகோவும் இல்லாமல் நடந்து கொண்டார். அது அவர் மீது எனது மரியாதையை அதிகப்படுத்தியது.  என்னைப் போன்ற மொழி தெரியாத புதுமுகத்துக்கு ஜெயம்ரவியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை பெரிய அதிர்ஷ்டமாக கருதுகிறேன்” என நடிகை சாயிஷா மேலும் தெரிவித்தார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg