Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்காவில் இருந்து அடுத்த வாரம் சென்னை திரும்பும் ரஜினிகாந்த்!

In சினிமா
Updated: 09:35 GMT, Jul 8, 2017 | Published: 09:35 GMT, Jul 8, 2017 |
0 Comments
1537
This post was written by : Ravivarman

ரஜினிகாந்துக்கு அமெரிக்காவில் மருத்துவ பரிசோதனை முடிந்துள்ள நிலையில், அடுத்த வாரம் சென்னை திரும்பி மீண்டும் ‘காலா’ படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நடிகர் ரஜினிகாந்த் 2 மாதங்கள் ரசிகர்கள் சந்திப்பு, காலா படப்பிடிப்பு என்று ஓய்வில்லாமல் இருந்ததால் மருத்துவ பரிசோதனை செய்துகொள்ளும்படி வைத்தியர்கள் அறிவுறுத்தியிருந்தமையால் திடீரென்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றிருந்தார்.

மேலும் சில நாட்கள் அமெரிக்காவில் தங்கி இருக்கும் ரஜினிகாந்த் அடுத்த வாரம் சென்னை திரும்பி மீண்டும் காலா படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். இதற்காக சென்னை பூந்தமல்லி அருகே உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் மும்பை தாராவி பகுதியை அரங்காக அமைத்து உள்ளனர்.

அங்கு ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட பெரும்பகுதி காட்சிகளை படமாக்கி முடிக்க இயக்குனர் பா.ரஞ்சித் திட்டமிட்டு உள்ளார். இந்த வருடம் இறுதியில் ‘காலா’ படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg