Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புதையல் தோண்டிய இருவர் கைது

In இலங்கை
Updated: 10:14 GMT, Jul 8, 2017 | Published: 10:14 GMT, Jul 8, 2017 |
0 Comments
1556
This post was written by : Varshini

திருகோணமலை – கிண்ணியா மகாமாரிக்குளம் பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில், இன்று (சனிக்கிழமை) இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து சிறிய பிள்ளையார் சிலை உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கிண்ணியா பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மகாமாரிக்குளம் பகுதிக்கு விரைந்த பொலிஸார், அப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை வழிமறித்து விசாரித்தபோது அவர்களிடமிருந்த குறித்த பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

கிண்ணியா மகரூப் நகர் பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து, விநாயகர் சிலை, இரு சிறு பெட்டகங்கள், தங்கத் தோடுகள் மற்றும் அவற்றை தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் யாவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் இன்று திருகோணமலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதோடு, கைப்பற்றப்பட்ட பொருட்களையும் ஒப்படைக்கவுள்ளதாக கிண்ணியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.ஐ.ஆனந்த வர்தன தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg