Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மைக்ரோசொட்ப் எட்ஜ் பிரெளசர்!

In தொழில்நுட்பம்
Published: 10:39 GMT, Jul 8, 2017 |
0 Comments
1131
icon_com
This post was written by : Surenth
Microsoft Edge

மைக்ரோசொப்ட் நிறுவனம் விண்டோஸ் 10ஒ.எஸ் அறிமுகம் செய்தபோதே மைக்ரோசொட்ப் எட்ஜ் பிரெளசரையும் அறிமுகம் செய்தது. இண்டர்நெட் எக்ஸ்புளோரர் ஒ.எஸ்.க்கு பதிலாக அறிமுகமாகியுள்ள இந்த எட்ஜ் பிரெளசர் பயன்படுத்துபவர்களுக்கு பலவிதமான புதிய அனுபவத்தை வழங்கி வருகின்றது.

எட்ஜ் பிரெளசர் என்பது புதிய வித்தியாசமான பிரெளசர். மேலும் இதில் டச் வசதியும் உண்டு. இந்த நிலையில் எட்ஜ் பிரெளசரில் உள்ள சில முக்கிய அம்சங்கள் குறித்து நாம் குறிப்பிடுகின்றோம்.

கோடானா (Cortana)
மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் வொய்ஸ் அசிஸ்டெண்ட் தான் கோடானா என்பது அனைவரும் அறிந்ததே. இந்த வசதி எட்ஜ் பிரெளசரில் உள்ளது. ஒருமுறை நீங்கள் கோடானாவை எனேபிள் செய்துவிட்டு பின்னர் கோடானாவை சியர்ச் பாரில் கிளிக் செய்து பயன்படுத்தி கொள்ளலாம். இந்த வசதியை எட்ஜ் விண்டோவில் உள்ள லொகேஷன் பாரில் உங்களுக்கு தேவையானவற்றை டைப் செய்தும் பெற்று கொள்ளலாம்.

பகிர்ந்து கொள்ளுதல் (Sharing)
இந்த எட்ஜ் பிரெளசர் அற்புதமான ஷேயாரிங் ஒப்சனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. டூல்பாரில் உள்ள ஷேயாரிங் பட்டனை கிளிக் செய்வதன் மூலம் இதனை பயனப்டுத்தி கொள்ளலாம். ஷேயார் பட்டனை டெப் செய்தால் உங்களுக்கு ஒரு சிறிய பெனல் ஓப்பன் ஆகும். இதன் சப்போட்டை அதிகப்படுத்தி கொள்ள உங்களுக்கு தேவையான செயலிகளையும் நீங்கள் விண்டோஸ் ஸ்டோரில் இருந்து இன்ஸ்டோல் செய்து கொள்ளலாம். ஒரே ஒரு ஸ்க்ரீன்சொட் மட்டுமே எடுத்து உங்களுக்கு தேவையானவற்றை ஷேயார் செய்து கொள்ளலாம்.

படிக்கும் பார்வை (Reading View)
மேக் ஓ.எஸ்.இல் உள்ள சஃபாரி பிரெளசரில் இருப்பது போலவே மைக்ரோசொப்ட் எட்ஜ் பிரெளசரிலும் ரீடிங் வியூ வசதி உள்ளது. இதன் மூலம் நீங்கள் எதை படிக்க விரும்புகிறீர்களோ அதை தவிர மற்றவற்றை மறைக்கும் வசதி இதில் உண்டு. இதை நீங்கள் அக்டிவேட் செய்ய அட்ரஸ் பாரில் உள்ள ரீடிங் வியூ ஐகானை க்ளிக் செய்தாலே போதும்.

தனித்திறன் கொண்ட டேப் (Customize Tab)
மைக்ரோசொப்ட் எட்ஜ் பிரெளசர் ஓப்பன் ஆகும்போது உங்களுக்கு எந்தவிதமான டேப்புகள் ஓப்பன் ஆக வேண்டும் என்பதை நீங்கள் செட்டிங் செய்து கொள்ளலாம். இந்த வசதியை நீங்கள் பெறுவதற்கு Main Menu -> Settings -> Select Open new tabs with and select your option என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

புக்மாக்கை இறக்குமதி செய்யலாம் (Import Bookmarks)
நீங்கள் கூகுள் குரோம், மொசில்லா பயர்பொக்ஸ் ஆகியவற்றில் ஏதாவது முக்கிய இணையதள பக்கத்தை புக்மாக் செய்து வைத்திருந்தால் அந்த பிரெளசரில் இருந்து மைக்ரோசொப்ட் எட்ஜ் பிரெளசருக்கு இறக்குமதி செய்து கொள்ளலாம். இந்த வசதியை நீங்கள் பெறுவதற்கு வலது ஓரத்தில் உள்ள ஹப் பட்டனை டெப் செய்து அதில் தோன்றும் இம்போட் புக்மாக்ஸ் என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.

படிக்கும் பட்டியல் (Reading List)
புக்மாக் செய்வதற்கு பதிலாக உங்களுக்கு தேவையான வெப் பக்கத்தை ரீடிங் லிஸ்ட்டில் சேமித்து வைத்து கொண்டு எப்போது வேண்டுமானாலும் அவற்றை படித்து கொள்ளலாம். இந்த வசதியை நீங்கள் பெற மேலே உள்ள ஸ்டார் பட்டனை அழுத்தி அதில் தோன்றும் ரீடிங் லிஸ்ட் என்பதை தேர்வு செய்து கொள்ளலாம்.

தீம் மாற்ற வேண்டுமா? (Change Theme)
மைக்ரோசொப்ட் எட்ஜ் பிரெளசர் லைட் மற்றும் டார்க் என இரண்டுவிதமான தீம்களை கொண்டே இருக்கும். இவற்றில் எதை வேண்டுமானாலும் நீங்கள் செலக்ட் செய்து கொள்ளலாம். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்: main menu -> Settings -> Theme -> Choose a theme.

பிளாஷ் (Flash)
கூகுள் குரோம் பிரெளசரில் இருப்பது போன்றே ஒருசில பிளாஷ் வீடியோக்களை கண்டு ரசிக்க பிளாஷ் பிளேயர் இதில் அமைந்துள்ளது. மெயின் மெனுவில் உள்ள செட்டிங் சென்று அட்வான்ஸ் செட்டிங் என்ற ஒப்சனை க்ளிக் செய்து Use Adobe Flash Player என்பதை க்ளிக் செய்து ஆன் செய்தால் போதும்.

ஹோம் பட்டன் (Home Button)
இந்த எட்ஜ் பிரெளசரில் டீபால்ட்டாக ஹோம் பட்டன் டிசேபிள் செய்யப்பட்டிருக்கும். உங்களுக்கு தேவையென்றால் அதை நீங்கள் எனேபிள் செய்து கொள்ளலாம். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது Settings -> Advanced Settings -> Enable/disable Home button.

பிரைவசி செட்டிங்:
பிரைவசி செட்டிங்கை நீங்கள் பெற வேண்டுமானால், Settings -> Advanced Settings -> Privacy and Services ஆகியவற்றை க்ளிக் செய்ய வேண்டும். இதில் உங்களுக்கு பாஸ்வேடை சேவ் செய்வது, எண்ட்ரீஸ், குக்கீச், ஆகியவற்றை சேவ் செய்வது உள்ளிட்ட பல வசதிகள் இருக்கும்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg