Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அண்ட்ராய்டில் இருந்து ஐ.ஓ.எஸ்.இற்கு தரவுகள் பரிமாற்றம்

In தொழில்நுட்பம்
Published: 11:18 GMT, Jul 8, 2017 |
0 Comments
1361
icon_com
This post was written by : Surenth
Android to IOS

அண்ட்ராய்டில் இருந்து ஐ.ஓ.எஸ். சாதனங்களுக்கு தரவுகளை பரிமாற்றம் செய்வது மிகப்பெரிய தலைவலியாக இருந்தது. இந்த நிலை தற்போது மாறிவிட்டது. அனைத்து தரவுகளையும் அண்ட்ராய்டில் இருந்து ஐ.ஓ.எஸ். மற்றும் ஐ.ஓ.எஸ்.இல் இருந்து அண்ட்ராய்ட் இயங்குதளத்திற்கு பரிமாற்றம் செய்வது எளிமையான விடயமாகி விட்டது.

ஐ.ஓ.எஸ். செயலிக்கு மாற்றுதல்

கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் அப்பிளின் முவ் டூ ஐ.ஓ.எஸ். அப் (Move to ios app) கொண்டு Photo, கலெண்டர், கண்டாக்ட், டெக்ஸ்ட் மெசேஜ், வீடியோக்களை எளிமையாக பரிமாற்றம் செய்ய முடியும். எனினும் செயலி, பாடல்கள் மற்றும் பாஸ்வேடுகளை பரிமாற்றம் செய்ய முடியாது. இந்த செயலி அணட்ராய்ட் ஸ்மார்ட்போன் மற்றும் டெப்லெட் சாதனங்களில் கிடைப்பதோடு ஐ.ஓ.எஸ். 9 அல்லது அதற்கும் அதிகமான சாதனங்களுக்கு பரிமாற முடியும்.

கூகுள் செயலிகள்

கூகுள் செயலிகளில் பெக்கப் செய்யும் வழக்கம் கொண்டவர் எனில், Photo மற்றும் இதர தகவல்கள் அனைத்தையும் பரிமாற்றம் செய்வது மிகவும் எளிமையைான ஒன்றாகும். கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் ஜிமெயில், Photos, கூகுள் க்ரோம் போன்ற செயலிகளை இன்ஸ்டோல் செய்து கொள்ளலாம்.

ஷெயார் இட்

தகவல்களை பரிமாற்றம் செய்ய அதிகம் பரிந்துரை செய்யப்படும் சேவை இது. ஒற்றை புகைப்படத்தில் இருந்து அனைத்து தரவுகளையும் பரிமாற்றம் செய்ய முடியும். இதற்கு இண்டர்நெட் இணைப்பு தேவைப்படாது என்றாலும் WiFi இணைப்பை ஒன் செய்ய வேண்டும். கூகுள் பிளே மற்றும் அப் ஸ்டோர்களில் இருந்து டவுன்லோட் செய்ய முடியும்.

பாஸ்ட்பைல் ட்ரான்ஸ்பர்

இந்த செயலி அண்ட்ராய்ட் சாதனத்தில் லோக்கல் WiFi நெட்வொர்க் ஒன்றை உருவாக்கி அதிக மெமரி கொண்ட தரவுகளை பரிமாற்றம் செய்யும். தரவுகளை மிக எளிமையாக பரிமாற்றம் செய்ய இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இன்ஸ்டா ஷெயார்

அண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். செயலிகளில் கிடைக்கும் இந்த செயலி அப்பிளின் ஏர்டிராப் சேவையை சார்ந்து வடிவமைக்கப்பட்டது. தரவுரளை கிளிக் செய்து அருகாமையில் உள்ள கண்டாக்ட்களில் டிராப் செய்து தரவுகளை பிரமாற முடியும்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg