Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கோட்டாபயவின் கைது குறித்து நான் எதுவும் கூறவில்லை – மஹிந்த

In இலங்கை
Published: 10:59 GMT, Jul 8, 2017 |
0 Comments
1301
icon_com
This post was written by : Ravivarman
625.500.560.350.160.300.053.800.900.160.90 (1)

கோட்டாபய ராஜபக்ஷவைக் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் தவறானனவை என்பதுடன் அவ்வாறான கருத்துக்கள் எதனையும் நான் தெரிவிக்கவில்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ நேற்று மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து தன்னைக் கைது செய்யப் போவதாக வெளியாகியுள்ள செய்தி குறித்து முறைப்பாடு செய்ததற்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இன்று (சனிக்கிழமை) இதனைக் கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கோட்டாபய ராஜபக்ஷ இந்நாட்டுக்காக சேவையாற்றிய ஓரு அதிகாரி. அவரைக் குறித்து நான் எதுவித தவறான கருத்துக்களையும் கொண்டிருக்கவில்லை.

ஆனால் இது குறித்து நான் தெரிவித்ததாக தவறான செய்திகள் பரவிவருகின்றன. ஆனால் அவற்றில் எதுவித உண்மையுமில்லை” என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg