Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வித்தியா கொலை தொடர்பான சாட்சிக்கு வெளிநாடு செல்ல தடை!

In இலங்கை
Updated: 11:35 GMT, Jul 8, 2017 | Published: 11:11 GMT, Jul 8, 2017 |
0 Comments
1758
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
bandaranayake-international-airport-4

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை தொடர்பான பொலிஸ் சாட்சியாளர் ஒருவருக்கு வெளிநாடு செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கொலை இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் யாழ். பொலிஸ் நிலையத்தில் உப பரிசோதகராக கடமையாற்றிய ஸ்ரீகஜன் என்பவர், இந்தியாவுக்கு செல்ல முயன்றபோதே, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வித்தியா கொலை தொடர்பான விசாரணையின் போது, வழக்கின் 9ஆவது எதிரியான சுவிஸ் குமார் தப்பிச்சென்று, பின்னர் உப பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீகஜனிடமே தான் சரணடைவதாக தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் அவரது வேண்டுகோளுக்கிணங்க சட்டத்தரணி தமிழ்மாறனின் வாகனத்தில் சுவிஸ்குமார் யாழ். பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதாக, கடந்த சாட்சியப்பதிவில் தமிழ்மாறன் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, வித்தியா கொலை தொடர்பான ட்ரயல் அட் பார் சாட்சியப்பதிவில், கடந்த வாரம் ஸ்ரீகஜனிடம் சுமார் 7 மணித்தியாலங்கள் விசாரணை நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg