Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மருத்துவ சபையின் தலைவராக பேராசிரியர் கொல்வின் குணரத்ன நியமிக்கப்படலாம்?

In இலங்கை
Published: 11:17 GMT, Jul 8, 2017 |
0 Comments
1169
icon_com
This post was written by : Ravivarman
srilanka medical council

இலங்கை மருத்துவ சபையின் புதிய தலைவராக பேராசிரியர் கொல்வின் குணரத்ன நியமிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை மருத்துவ சபையின் தலைவர் பேராசிரியர் காலோ பொன்சேகாவின் பதவிக் காலம் கடந்த ஜூன் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளதையடுத்து, ஐந்து வருடங்கள் பணியாற்றிய இவர் மேலதிகமாக ஆறு மாதங்கள் இலங்கை மருத்துவ சபையின் தலைவராக கடமையாற்றியுள்ளார்.

பேராசிரியர் காலோ பொன்சேகா கடந்த 2012 ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கை மருத்துவ சபையின் தலைவர் பதவியை வகித்து வந்துள்ளார்.

அரசாங்கத்தினால் நியமனம் வழங்கப்படவிருக்கும் புதிய தலைவர் சைட்டம் பிரச்சினைக்கு தீர்வை கொண்டுவருவாரா? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg