Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பல்கலைக்கழகங்களைத் தனியார் துறைக்கு வழங்கும் எண்ணமில்லை: லக்ஷ்மன்

In இலங்கை
Published: 11:43 GMT, Jul 8, 2017 |
0 Comments
1224
icon_com
This post was written by : Ravivarman
collakshman-kiriella

பல்கலைக்கழகங்களைத் தனியார் துறைக்கு வழங்கும் நோக்கம் எதுவும் அரசாங்கத்திற்கு இல்லை என நெடுஞ்சாலைகள் மற்றும் உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற உயர்கல்வி தொடர்பான தனிநபர் பிரேரணையில், ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸவின் உரைக்குப் பதிலளிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிலிருந்து அகற்றி, அவற்றை இலாபமீட்டும் சுயாதீன நிறுவனங்களாக மாற்றவிருப்பதாக ஊடகங்களில் வெளியானதாக கூறப்படும் செய்திகளை நளிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக் காட்டியிருந்தார்.

எனினும் அரசாங்கத்திற்கு அவ்வாறான திட்டச் செயற்பாடுகள் எவையும் இல்லை என்பதுடன், நாட்டின் எந்தவொரு பல்கலைக்கழகங்களும் தனியார் மயப்படுத்தப்பட மாட்டாது” என அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg