Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சந்தன மரக் கட்டைகளை கடத்தியவர்கள் கைது

In இலங்கை
Updated: 12:35 GMT, Jul 8, 2017 | Published: 12:33 GMT, Jul 8, 2017 |
0 Comments
1313
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
sandalwood (1)

ஊவா பரணகம பகுதியிலிருந்து வெலிமடை பிரதேசத்திற்கு சட்ட விரோதமான முறையில் சந்தன மரக் கட்டைகளை கடத்திய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

முச்சக்கர வண்டியொன்றில் நேற்று (வெள்ளிக்கிழமை) சந்தனக் கட்டைகளை கடத்திச் சென்ற போதே அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வெலிமடை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, ஊவா பரணகம ஹிம்பிலியகஹமடித்த பகுதியில் குறித்த சந்தேக நபர்களை கைதுசெய்ததோடு, முச்சக்கர வண்டியையும் கைப்பற்றியுள்ளனர்.

இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட சந்தன மரக் கட்டைகளின் பெறுமதி, சுமார் ஒரு லட்சம் ரூபாய் எனத் தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு, மரத்தை வெட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேகநபர்களை வெலிமடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கும் அம்பகஸ்தோவ பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

sandalwood (2) sandalwood (3) sandalwood (4)

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg