Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் 4வது சுற்றில் – சானியா ஜோடி வெற்றி

In விளையாட்டு
Updated: 04:39 GMT, Jul 9, 2017 | Published: 03:08 GMT, Jul 9, 2017 |
0 Comments
1117
icon_com
This post was written by : Kemasiya
sania-ivan

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் ஏஞ்சலிக் கெர்பர் ராட்வன்ஸ்கா ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினர்.

விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 3-வது சுற்றில் அமெரிக்க வீரர் சாம் குயரி 6-2, 3-6, 7-6(5), 1-6, 7-5 என்ற செட் கணக்கில் பிரான்சின் சோங்காவுக்கு அதிர்ச்சி அளித்தார்.

மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் செர்பியாவின் ஜோகோவிச் 6-4, 6-1, 7-6 (7-2) என்ற செட் கணக்கில் குல்பிசை (லாத்வியா) வீழ்த்தி 4-வது சுற்றை உறுதி செய்தார்.

மிலோஸ் ராவ்னிக் (கனடா), கிரிகோர் டிமிட்ரோவ் (பல்கேரியா), ஆன்டி முர்ரே (இங்கிலாந்து) ஆகியோரின் வீறுநடையும் தொடருகிறது.

பெண்கள் ஒற்றையர் 3-வது சுற்றில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) 4-6, 7-6 (7-2), 6-4 என்ற செட் கணக்கில் போராடி ஷெல்பி ரோஜர்சை (அமெரிக்கா) தோற்கடித்தார். இதில் ஒரு கட்டத்தில் முதல் செட்டை இழந்து 2-வது செட்டில் 2-4 என்று பின்தங்கி தோல்வியின் விளிம்பில் தவித்த கெர்பர் அதன் பிறகு சரிவில் இருந்து மீள்ச்சி பெற்றனர்.

இதே போல் அக்னீஸ்கா ராட்வன்ஸ்கா (போலந்து) 3-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் பாக்சின்ஸ்கியையும் (சுவிட்சர்லாந்து)இ ஸ்பெயினின் கார்பின் முகுருஜா 6-2, 6-2 என்ற நேர் செட்டில் ருமேனியாவின் சோரனா கிர்ஸ்டியாவையும் சாய்த்து 4-வது சுற்றுக்கு முன்னேறினார். வோஸ்னியாக்கி (டென்மார்க்), குஸ்னெட்சோவா (ரஷியா), கோகோ வன்டேவெஜ் (அமெரிக்கா), ரைபரிகோவா (சுலோவக்கியா) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்றனர்.

பெண்கள் இரட்டையர் பிரிவின் 2-வது சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா- பெல்ஜியத்தின் பிலிப்கென்ஸ் கூட்டணி 6-3, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் இங்கிலாந்தின் நவோமி பிராடி-ஹீதர் வாட்சனை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg